சுவிட்ஸர்லாந்தின் செய்ண்ட் ஜேகப்பார்க்கில் நடைபெற்ற மகளிர் யூரோ கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெய்னை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து சம்பியனாகியது.
இறுதிப் போட்டியில் இங்கிலாஅந்தும், ஸ்பெய்னும் தலா ஒரு கோல் அடித்தன. கூடுதல் நேரத்திலும் இரண்டு அணிகளும் கோல் அடிக்கத்தனால் பெனால்டி ஷூட் அவுட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துள்ளது.
இங்கிலாந்தின் 19 வயதான வீராங்கனையான மிச்செல் அக்யேமாங் போட்டியின் இளம் வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காலிறுதி , அரையிறுதியில் இங்கிலாந்து அணி பின்தங்கிய நிலையில் இருந்து வந்ததால் முக்கியமான சமநிலை கோல்களை இங்கிலாந்தின் வெற்ரி பயிற்சியாலர் சரீனா வீக்மேனுக்கும் ஒரு பெரிய சாதனையாகும், அவர் இப்போது அணிகளை மூன்று முறை யூரோ கொண்ணப்போட்டிக்கு வழிநடத்தியுள்ளார். நெதர்லாந்தை ஒரு முறையும் , இங்கிலாந்தை இரண்டு முறை யும் யூரோ சம்பியனாக்கினார்.
1984 ஆம் ஆண்டு தொடக்கப் யூரோ கிண்ண போட்டியில் இருந்து இங்கிலாந்து சுவீடனிடம் தோல்வியடைந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் கிண்ண உதைபந்தாட்ட உலகக்கிண்ண இருதிப்போட்டியில் ஸ்பெய்னை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து தோல்வியடைந்தது