பொலிஸ் காவலில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒருவர் இறந்த ஒவ்வொரு வழக்கிலும், அந்த நேரத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் மீது தேவையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலா, தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் கைதிகளின் பாதுகாப்பு ,நல்வாழ்வுக்குப் பொறுப்பான ஒரு கடமை அதிகாரி இருக்கிறார். ஒரு கைதி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்தால், அந்த நேரத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
“பொலிஸ் நிலைய மரணங்கள் வழக்கமாக நடப்பதில்லை. இருப்பினும், இதுபோன்ற சம்பவம் நிகழும் போதெல்லாம், சரியான நடவடிக்கை எடுக்கப்படுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். உள் விசாரணைகளுக்குப் பிறகு பொலிஸ் அதிகாரிகள் தண்டிக்கப்பட்ட பல வழக்குகள் உள்ளன. பொலிஸ் நிலையங்களில் ஒவ்வொரு கைதியையும் கண்காணிக்க அதிகாரிகளை நியமிப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை, ஆனால் இந்த சம்பவங்களைத் தடுக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்,”
சமீப காலங்களில்பொலிஸ் காவலில் இருக்கும்போது சந்தேக நபர்கள் இறந்ததாக பல தகவல்கள் வந்துள்ளன. வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஆர். ராஜகுமாரி, வட்டுக்கோட்டை காவல் பொலிஸ் நிலையத்தில் நிமேஷ் சத்சாரா ஆகியோரின் மரணம் ஆகியவை சமீபத்திய வழக்குகளில் சில. பெரும்பாலான வழக்குகளில், குற்றங்கள் நடந்ததாக அந்தந்த நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளைக் கைது செய்யப்பட்டனர் என்றார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் (HRCSL) சமீபத்திய அறிக்கையில், 2020 ஆம் ஆண்டுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கும் இடையில் 49 பொலிஸ் மரணங்களும் 30 என்கவுண்டர் மரணங்களும் பதிவு செய்யப்ப பொலிஸ் சிறையில் இழந்த உயிர்கள் சேர்க்கப்படவில்லை.