கமரூன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட் விண்ணப்பித்த 83 வேட்பாளர்களில் 13 வேட்பாளர்களை தற்காலிகமாக அங்கீகரித்துள்ளதாககமரூனின் தேர்தல் அமைப்பான தேர்தல்கள் (எலிகாம்), சனிக்கிழமை அறிவித்தது.
எலெகாமின் தேர்தல் சபைத் தலைவர் எனோவ் ஆப்ராம்ஸ் எக்பே தெரிவித்த இந்த அறிவிப்பு, கமரூனின் தலைநகரான யவுண்டேவில் வெளியிடப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலில் தற்போதைய ஜனாதிபதி பால் பியா, எதிர்க்கட்சித் தலைவர் ஜோசுவா ஓசிஹ் , இரண்டு முன்னாள் அமைச்சர்கள், பியாவின் கூட்டாளிகளான இசா டிச்சிரோமா பேக்கரி, பெல்லோ பௌபா மைகாரி ஆகியோரின் பெயர் உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 13 வேட்பாளர்களில் ஹெர்மின் பாட்ரிசியா டொமைனோ ந்தம் ந்ஜோயா மட்டுமே பெண்.எதிர்க்கட்சித் தலைவர் மாரிஸ் காம்டோவின் விண்ணப்பக் கோப்பு நிராகரிக்கப்பட்டது. நாட்டின் தேர்தல் விதிகளின்படி, தேர்தலில் போட்டியிட ஒப்புதல் பெறாதவர்கள் 48 மணி நேரத்திற்குள் அரசியலமைப்பு கவுன்சிலிடம் மேல்முறையீடு செய்யலாம். ஒக்டோபர் 12 ஆம் திகதி கமரூனில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.