காலியின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட ஒரு பெரிய தேடுதல் நடவடிக்கையில் மொத்தம் 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையில் மகாமோதராவில் உள்ள ஒரு சூதாட்ட மையத்தில் நடத்தப்பட்ட சோதனையும் அடங்கும், அங்கு 13 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் வைத்திருந்ததாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையின் போது பல சாரதிகள் மீது போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
காலி டிஐஜி தலைமையிலான இந்த நடவடிக்கை, பிராந்தியத்தில் சட்டவிரோத ஆயுதங்கள் . போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது.