Saturday, July 26, 2025 8:42 am
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகளால் 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஜேர்மனிய வாகன நிறுவனமான வோக்ஸ்வாகனுக்கு சுமார் 1.5 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வரிகள் காரணமாக வட அமெரிக்காவில் வாகன விற்பனை 16% சரிந்ததாக ஆடி, லம்போர்கினி ,போர்ஷே உள்ளிட்ட பல பிராண்டுகளை சொந்தமாகக் கொண்ட வோக்ஸ்வாகன் தெரிவித்துள்ளது.

