டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்நாட்டில் அதிக சதங்களை அடித்த இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தி இங்கிலாந்து நட்சத்திரம் ஜோ ரூட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்டில் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது ஜோ ரூட் இந்த மைல்கல்லை எட்டினார்.இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அவருக்கு 38வது சதமாகும்.
இங்கிலாந்து மண்ணில் அவரது 23வது டெஸ்ட் சதமாகும், இதன் மூலம் டெண்டுல்கர் , இலங்கையின் ஜாம்பவான் குமார் சங்கக்கார ஆகியோரை முந்தினார்.
உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள்
இதன் மூலம், சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் கிரிக்கெட் சதங்கள் அடித்த சாதனையை வைத்துள்ள மஹேல ஜயவர்தன, ஜாக் கலிஸ் , ரிக்கி பாண்டிங் ஆகியோரை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.
இவர்கள் அனைவரும் 23 சதங்களை பெற்றுள்ளனர்.
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியல் இப்போது பின்வருமாறு:
ஜோ ரூட்: 84 போட்டிகளில் 23 சதங்கள்
மஹேல ஜயவர்த்தன: 81 போட்டிகளில் 23
ஜக்ஸ் கலிஸ்: 88 போட்டிகளில் 23
ரிக்கி பாண்டிங்: 92 போட்டிகளில் 23
சச்சின் டெண்டுல்கர்: 94 போட்டிகளில் 22
டெஸ்ட்டில் சச்ச்சின் டெண்டுல்கர் 15,921 ஓட்டங்கள் அடித்துள்ளார். ஜோரூட் 13,380 ஓட்டங்கள் அடித்தார்.