அஹமதாபாத்தில் ஜூன் 12 ஆம் திகதி நடந்த ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து குறித்து பொது மன்னிப்பு கேட்டு, தனது அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP) தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ,ராய்ட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வ அறிவிப்புகளை அனுப்பியுள்ளது.
இந்த ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளை ஆதாரமற்றது. அவதூறானது என்று இந்திய விமானிகள் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
, இந்தியாவின் அதிகாரப்பூர்வ விசாரணையிலிருந்து உண்மைகளை அந்த ஊடகங்கள் தவறாக சித்தரித்ததாக குற்றம் சாட்டியது.
விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையின்படி, போயிங் 787 ட்ரீம்லைனரில் உள்ள இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரன்னிலிருந்து கட்ஆஃப் நிலைக்கு மாற்றப்பட்டன.
அறிக்கையில் விமானிகள் மீது குற்றம் சுமத்தவில்லை
சுவிட்சுகள் கட்ஆஃப் செய்யப்பட்டதாகக் கூறினாலும், அறிக்கை எந்தக் குற்றத்தையும் சுமத்தவில்லை அல்லது உள்நோக்கத்துடன் இது செய்யப்பட்டதாகக் கூறவில்லை.
இதுபோன்ற நிலையில், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் , ராய்ட்டர்ஸ், ஆகியன கப்டன் வேண்டுமென்றே எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியிருக்கலாம் என்று பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய விமானிகள் கூட்டமைப்பு இந்த கூற்றுக்கள் ஆதாரமற்றவை எனத் தெரிவித்துள்ளது.