இந்த வாரம் தெற்கு சிரியாவில் உள்ள போராளிகள், அரசாங்க அதிகாரிகள் ,பெடோயின் பழங்குடியினர் சம்பந்தப்பட்ட வன்முறையில் பல நூறு பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தெற்கு மாகாணமான ஸ்வீடாவில் வன்முறை அதிகரித்ததால், இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது, புதன்கிழமை டமாஸ்கஸில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் மீதும் , ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு இலக்கு மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையில் போர் நிருத்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்கா அரிவித்துள்ளது.