ஜோர்டானிய மருத்துவ வழித்தட முன்முயற்சியின் கீழ், காஸா பகுதியில் இருந்து நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் ஏழாவது குழுவை ஜோர்தான் ஆயுதப்படைகள் புதன்கிழமை வெளியேற்றியதாக இராணுவ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் 35 குழந்தைகளும், 72 குடும்ப உறுப்பினர்களும் அடங்குவர். அவர்கள் கிங் ஹுசைன் பாலம் வழியாக உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக ஜோர்தானுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஜோர்தானிய சுகாதார அமைச்சு , உலக சுகாதார அமைப்பின் ஒருங்கிணைப்புடன் இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டது.
மார்ச் மாதத்தில் இந்த முயற்சி தொடங்கப்பட்டதிலிருந்து வெளியேற்றப்பட்ட மிகப்பெரிய குழு இதுவாகும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இன்றுவரை, மொத்தம் 112 குழந்தைகளும் 241 குடும்ப உறுப்பினர்களும் மருத்துவ பராமரிப்புக்காக ஜோர்தானுக்கு அனுப்பப்பட்டனர்.
காஸாவில் இருந்து 2,000 பாலஸ்தீன குழந்தைகளை சிகிச்சைக்காக ஏற்றுக்கொள்ள நாடு தயாராக இருப்பதாக ஜோர்தானின் மன்னர் இரண்டாம் அப்துல்லா,அறிவித்தார்