உக்ரைனை ஆதரிப்பதற்காக நேட்டோவிற்கு “உயர்மட்ட ஆயுதங்களை” அனுப்ப டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஷ்யாவிற்கு “கடுமையான” வரிகள் விதிக்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளார்.
ரஷ்யா மீது தான் “மிகவும் அதிருப்தி” அடைந்துள்ளதாகவும் கூறிய ட்ரம்ப் , 50 நாட்களுக்குள் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், “சுமார் 100%” “கடுமையான வரிகளை” விதிக்க நேரிடும் என்றும் மிரட்டினார்.
ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா “இரண்டாம் நிலைத் தடைகளை” விதிக்கும் என்று வெள்ளை மாளிகை மேலும் கூறியது.