பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் மட்டுவிலைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் (வயது – 61) என்பவர் ஞாயிற்றுக்கிழமை[13] மட்டுவில் சந்திரபுரத்தில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
இவர் தனது இரு காதுகளையும் பயன்படுத்தி 2 ஆயிரத்து 50 கிலோ எடை கொண்ட பிக்கப் ரக வாகனத்தை 50 மீற்றர் தூரத்துக்கு இழுத்துச் சாதனை புரிந்துள்ளார்.
உலக சாதனையை நிகழ்த்துவதற்காக அவர் இந்த சாதனையைச் செய்துள்ளார். அவர் தனது தாடியால் அதே வாகனத்தை 50 மீற்றர் தூரத்துக்கு இழுத்து மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளார்.