பெளத்த மதத்தலைவரும் திபெத்தின் ஆன்மீக தலைவருமான தலாய் லாமாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 80 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
90 வயதான தலாய் லாமா, சீனாவின் அழுத்தத்தையடுத்து 1959-ல் இந்தியாவில் தஞ்சம் புகுந்து, தற்போது ஹிமாசலப் பிரதேசத்தில் வசித்து வருகிறார்.இந்தியாவில் ஆன்மீக, அமைதியின் சின்னமாக வணங்கப்படுகிறார்.
‘பாரத ரத்னா’ விருது, இந்தியாவின் மிக உயரிய விருதாகும். இது சிறந்த சேவை மற்றும் பங்களிப்புகளுக்காக வழங்கப்படுகிறது.
தலாய் லாமாவுக்கு இவ்விருது வழங்கப்பட வேண்டும் என்கிற இந்த வலியுறுத்தல், மென்மையான அரசியல் செய்தியையும், ஆன்மீக வழிகாட்டியாக தலாய் லாமாவின் பெருமையை வெளிக்கொணருகிறது.
தலாய் லாமாவை பாரத ரத்னாவுக்குத் தேர்வு செய்யும் இக்கருத்துக்கு பரவலான வரவேற்பு இருக்கும் நிலையில், சீனாவுடன் மனசக்கப்பை ஏற்படுத்தக்கூடிய முடிவை மத்திய அரசு எடுக்குமா என பலரும் காத்துள்ளனர்.