கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
மூவரும் முச்சக்கர வண்டியில்சென்ற போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பிஸ்டல் வகை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 30 வயதான தாயும் அவரது 12 வயது மகளும், 44 வயதுடைய மற்றொரு ஆணும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களைக் கைது செய்ய கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.