மருதமடு அன்னையின் திருச்சொருப ஆசீருடன் வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா இன்று புதன்கிழமை நிறைவடைந்திருக்கிறது.
திருவிழாத் திருப்பலி காலை 6.15 க்கு தமிழ், சிங்கள மொழிகளில் ஆயர்களின் தலமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், குருநாகல் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஹெரல்ட் அன்ரனி பெரேரா, ஒய்வுநிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆகியோர் திருவிழாத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்கள். திருவிழாத் திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றது.
திருச்சொரூப பவனியின் நிறைவில் பக்த அடியார்களுக்கு மடு அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டு திருவிழா நிறைவடைந்தது.
மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித்திருவிழா கடந்தஜூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.