பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூரில் நடந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், ஒரு வீரர் சிக்ஸர் அடித்த சில நிமிடங்களில் மைதானத்திலேயே சரிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சமூக ஊடகங்களில் இது தொடர்பாக வெளியான அதிர்ச்சியூட்டும் வீடியோவில், ஹர்ஜீத் சிங் என அடையாளம் காணப்பட்ட வீரர் பந்தை எல்லைக்கு வெளியே அடிப்பதைக் காட்டுகிறது.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில், திடீரென கீழே விழுந்து, பின்னர் சுயநினைவை இழந்தார்.
சக வீரர்கள் உடனடியாக அவருக்கு சிபிஆர் முதலுதவி சிகிச்சை செய்து மிக முயன்றனர்.மாரடைப்பு காரணமாக அவர் உடனடியாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டு புனேவில் உள்ள கார்வாரே ஸ்டேடியத்தில் நடந்த இதேபோன்ற சோகத்தை இது எதிரொலிக்கிறது.
அங்கு 35 வயதான கிரிக்கெட் வீரர் இம்ரான் படேலுக்கு விளையாடும் போது மாரடைப்பு ஏற்பட்டது.
இன்னிங்ஸைத் தொடங்கி வைத்த இம்ரான், சிறிது நேரம் பேட்டிங் செய்த பிறகு மார்பு , கை வலி இருப்பதாகதெரிவித்தார்.
அவர் நடுவர்களுக்குத் தகவல் தெரிவித்து மைதானத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார், ஆனால் பெவிலியனுக்குத் திரும்பிச் செல்லும்போது சரிந்து விழுந்தார்.
உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், இம்ரான் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.