இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜகன்நாதர் ஆலயத்தின் வருடாந்திர இரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜூன் 27 ஆம் திகதி ஆரம்பமாகியது. ஜூலை 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. விழாவின் மூன்றாவது நாளான இன்று இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.