ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி மணல் திட்டில் மூன்று இலங்கையர்கள் சுற்றி திரிவதாக கடலோர காவல்படை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
அப்போது அவர்கள் இலங்கை பேசாலையைச் சேர்ந்தவர்கள் என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் என தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அகதிகளாக வந்த 3 பேர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என உளவுத்துறை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதன் பின் அவர்கள் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.