கர்நாடகாவின் கோகர்ணாவில் உள்ள பண்டைய ஸ்ரீ மகாபலேஷ்வரர் கோயிலில், ரஷ்ய இராணுவ வீரர் செர்ஜி கிராப்லெவின் இறுதிச் சடங்குகள் இந்து வழக்கப்படி செய்யப்பட்டன.
இந்து மதத்தின் தீவிரப் பின்பற்றுபவரான கிராப்லெவ், 18 ஆண்டுகளாக கோகர்ணாவுக்குத் தொடர்ந்து சென்று வந்தார். வாரணாசியில் ஆன்மீகத் தீட்சையும் பெற்றார்.
ஆபத்துகள் இருந்தபோதிலும், சமீபத்தில் மீண்டும் ரஷ்ய ராணுவப் பணிக்குத் திரும்பினார். இந்நிலையில், ஏப்ரல் 28 அன்று போரில் கொல்லப்பட்டார்.
அவரது குடும்பத்தினர் இந்தியாவுக்கு வர முடியாததால், இறுதிச் சடங்குகளை வி. பிரசாந்த் ஹிரேகங்கே என்ற இந்து மதகுரு மூலம் நடத்தினர்.
அதே நேரத்தில் கிராப்லெவின் உறவினர் எலெனா வீடியோ அழைப்பு மூலம் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.
ஸ்ரீ மகாபலேஷ்வரர் கோயில், 4 ஆம் நூற்றாண்டில் கடம்ப வம்சத்தினரால் கட்டப்பட்ட ஒரு கோவிலாகும்.
இது ஏழு முக்திஷேத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கார்வார் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்தக் கோயில் குறிப்பிடத்தக்க ஆன்மீக, கலாசார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, யாத்ரீகர்களையும் சுற்றுலாப் பயணிகள் அங்கு அதிக அளவில் செல்கின்றனர்.
Trending
- இலங்கையில் கஞ்சா பயிரிட சட்டபூர்வ அனுமதி
- மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்
- ஹர்த்தால் போராட்டம் ஓகஸ்ட் 18ஆம் திகதி
- மனித ரோபோவினால் இயக்கப்படும் முதலாவது வர்த்தக நிலையம்
- ஊர்காவற்துறையில் நிலத்திற்கு கீழ் கஞ்சா மீட்பு
- தொண்டைமானாறு கடல் நீரேரியில் பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு
- ஐஜிபியிடம் புகாரளிக்க வட்ஸ்அப் ஹொட்லைன் அறிமுகம்
- விபத்துகளைத் தடுக்க பஸ்களில் பொருத்தப்பட்ட AI கமராக்கள்