ஏர் இந்தியா விமானம் 171 இன் இரண்டு கறுப்புப் பெட்டிகளும், விமானத் தரவுப் பதிவாளர் (ஃப்ட்ற்),காக்பிட் குரல் பதிவாளர் (CVR) உட்பட, கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர் பி.கே. மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை இரவு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார்.
திங்கட்கிழமை அதிகாலை இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கறுப்புப் பெட்டி CVR ஆகும், முந்தையது FDR ஆகும்.
ஜூன் 13 ஆம் திகதி முதல் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், விபத்து விசாரணை அறிக்கை மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்றும் இந்தியாவின் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு கூறியுள்ளார்.