ஒரு புதிய வகை பிளாஸ்டிக்கை ஜப்பான் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது கடலில் போட்டால் சில மணி நேரங்களில் கரைந்துவிடும் தன்மை கொண்டது என்பதே இதன் சிறப்பாகும்.. கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் பெருகி வருவது மிகப் பெரிய சிக்கலாக மாறி பிளாஸ்டிக் மாசை ஏற்படுத்தி வரும் சூழலில் அதற்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்க முடியும். இந்த மக்கும் பிளாஸ்டிக் குறித்து விஞ்ஞானிகள் நீண்ட காலமாகவே பரிசோதனை செய்து வருகின்றனர். டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த புதிய பிளாஸ்டிக், மிக விரைவாக உப்பு நீரில் கரையும் என்றும் இது வேறு எந்தவிதமான எச்சத்தையும் விட்டுச் செல்லாது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது எப்படி வேலை செய்கிறது என்பதை விளக்கும் வகையில் டோக்கியோவுக்கு அருகிலுள்ள வாகோ நகரில் உள்ள ஆய்வகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் உப்பு நீர் நிரப்பப்பட்ட ஒரு கேனில் சிறிய பிளாஸ்டிக் துண்டு போடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்தில் அந்த பிளாஸ்டிக் மொத்தமாகக் கரைந்து மறைந்து போனது. இந்த கண்டுபிடிப்பை பிஸ்னஸாக எப்படி மாற்றுவது என்பது குறித்து எந்தவொரு திட்டமும் வகுக்கப்படவில்லை எனக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், பலரும் இதில் ஆர்வமாக இருப்பதால் ஆய்வுகளைத் தீவிரப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தனர்.
Trending
- உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து!
- மாத்தறையில் மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை
- தமிழகத்திலிருந்து நல்லூருக்கு வந்த கலைஞர்கள்
- எல்ல பஸ் விபத்து : ஜீப் வாகன சாரதி கைது
- எல்ல பஸ் விபத்து : மீட்புபணியில் ஹெலிகொப்டர்கள்
- எல்ல பஸ் விபத்தில் இதுவரை 15 பேர் பலி
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது