Thursday, June 5, 2025 11:20 am
ரோஹிங்கியா புகலிடக் கோரிக்கையாளர்களின் குழுவை அணுக அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையம் , ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமை ஆகியன – அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் துன்புறுத்தப்படும் ரோஹிங்கியா இன சமூகத்தைச் சேர்ந்த மொத்தம் 116 பேர் 2024 டிசம்பர் 19 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்கரையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் முல்லைத்தீவில் உள்ள இலங்கை விமானப்படை (SLAF) முகாமில் அடுத்த நீதிமன்ற விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர்.
அரசாங்கம் இந்தக் குழுவை “சட்டவிரோத குடியேறிகள்” என்று கருதுவதாகவும், எனவே அவர்களைச் சந்திக்க UNHCR-ஐ அணுக வேண்டிய அவசியம் தற்போது இல்லை. “நீதிமன்றத் தீர்ப்பு இல்லாமல், நாங்கள் முடிவு செய்ய முடியாது. நாங்கள் இன்னும் அவர்களை புகலிடம் கோருபவர்களாகக் கருதவில்லை; நீதிமன்றம் முடிவு செய்யும்,” என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, தெரிவித்தார்.
2007 ஆம் ஆண்டு முதல் ரோஹிங்கியா அகதிகள் பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு வந்துள்ளனர், மேலும் நாடு மொத்தம் சுமார் 300 பேரை தங்க வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் அகதி அந்தஸ்து வழங்கிய பிறகு, பலர் வேறு இடங்களில் நிரந்தர வதிவிடத்தைக் கண்டறிந்துள்ளனர், தற்போது சுமார் 100 பேர் இங்கு வசிக்கின்றனர்.