ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறி சிலர் வியாபாரம் செய்வதாகவும், சிலர் வேலை செய்வதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
சுற்றுலா அல்லது விருந்தோம்பல் துறையில் முதலீடு , வேலைவாய்ப்புக்காக இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு விஸா வழங்குவதில் பின்பற்ற வேண்டிய கடுமையான வழிகாட்டுதல் உள்ளன. விருந்தோம்பல் துறையில் சமையல்காரர்கள், மேலாளர்கள் ,சிகிச்சையாளர்கள் போன்ற பிரிவுகளில் வெளிநாட்டினருக்கு விஸாக்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட தரத்திற்கு மேல் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மட்டுமே வெளிநாட்டு குடிமக்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், சிறிய உணவகங்களில் கூட வெளிநாட்டினர் வேலை செய்கின்றனர்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,விஸா விதிமுறைகள் மீறப்பட்டால் வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவார்கள் “இது தொடர்பாக நாங்கள் நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறோம்,” என்றார்.