தமிழ்நாட்டில் காலியான ஆறு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ராஜ்யசபா எம்பிக்களாக உள்ள திமுகவைச் சேர்ந்த எம். சண்முகம், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன், ம.தி.மு.க. தலைவர் வைகோ, பா.ம.க.வை சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், , அ.தி.மு.க.வை சேர்ந்த என். சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் முடிவடைகின்றன. இதையடுத்து 6 இடங்கள் காலியாகியுள்ளன. அந்த இடங்களுக்குத்தான் தற்போது தேர்தல் நடைபெறவுள்ளது.
சட்டசபையில் உள்ள எம்.எம்.ஏக்கள் கணக்குப்படி திமுகவுக்கு நான்கு இடங்களும், அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும்
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு சீட் தரப்படும் என்று கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்திலேயே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. கமல்ஹாசன் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவார்.