“1,000 பேருக்கு 1,000 என்ற சூத்திரத்தின்” கீழ் ரஷ்யாவுடனான கைதிகள் பரிமாற்றத்தின் முதல் கட்டத்தின் போது 390 உக்ரேனியர்கள் சிறையிலிருந்து வீடு திரும்பியதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
“சனி , ஞாயிற்றுக்கிழமைகளில், பரிமாற்றம் தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று ஜெலென்ஸ்கி சமூக ஊடக தளமான X இல் எழுதினார்.
உக்ரைன் இன்னும் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து குடிமக்களையும் திருப்பி அனுப்ப இராஜதந்திர முயற்சிகளைத் தொடரும் என்று அவர் வலியுறுத்தினார்.
மே 16 அன்று துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த சந்திப்பின் போது உக்ரைனும் ரஷ்யாவும் தங்கள் கைதிகளின் மிகப்பெரிய பரிமாற்றத்தில் ஒரு ஒப்பந்தத்தை எட்டின.