கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள நெக்ஸ்ட் ஆடைத் தொழிற்சாலை திடீரென மூடப்பட்டதால் 1,400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். மே 19 அன்று இரவு வாட்ஸ்அப் செய்தி மூலம் தொழிற்சாலை உடனடியாக செயல்பாடுகளை நிறுத்துவதாக தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த தொழிற்சாலை, அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகள்,தொடர்ச்சியான நிதி இழப்புகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. நிறுவனத்தின் அறிக்கையின்படி, தொழிற்சாலையின் 2,825 தொழிலாளர்களில் 1,416 பேர் பாதிக்கப்பட்டனர், அதே நேரத்தில் மற்ற தொழிற்சாலைகளில் மீதமுள்ள ஊழியர்கள் தங்கள் வேலையைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.