அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனதிபதி புட்டினுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் ரஷ்யாவும் உக்ரைனும் திங்களன்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை “உடனடியாக” தொடங்க ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார்.
பெப்ரவரியில் ஜெலென்ஸ்கியுடனான ஓவல் அலுவலக தகராறின் பின்னர் ட்ரம்ப் உக்ரைன் மீது கோபமாக இருந்தார். புட்டினை விரிவாக விமர்சிப்பதைத் தவிர்த்து வந்தார்.
ரஷ்யா ஒரு உடன்பாட்டை எட்டத் தவறினால் புதிய தடைகள் இன்னும் ஒரு வழி என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறினார். மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகள் மட்டுமே என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியதைத் தொடர்ந்து, ட்ரம்ப் இன்னும் புடினை சந்திக்க நம்புவதாகவும் அவர் கூறினார்.