Monday, May 19, 2025 5:51 pm
ஜனவரி 1 முதல் மே 18 வரை நடைபெற்ற வீதி விபத்துகளில் 1,007 பேர் பலியானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணிகளாக அலட்சியம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் , முறையற்ற வாகன பராமரிப்பு ஆகியவை அடையாளம் கணப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, ஓட்டுநர் விழிப்புணர்வு முயற்சிகளுடன் போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு சிறப்பு தீவு தழுவிய திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இந்த ஆண்டு 26,000 க்கும் மேற்பட்டசாரதிகள் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளதாக எஸ்.எஸ்.பி மனதுங்க குறிப்பிட்டார்.

