ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தின் பிரிவுகளில் ஒன்றான பிராந்திய ராணுவம் எனப்படும் டெரிட்டோரியல் ஆர்மியில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த நியமனம், 1948 ஆம் ஆண்டு பிராந்திய ராணுவ விதிமுறைகளின் பத்தி-31 இன் கீழ் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பை ராணுவ விவகாரத் துறையின் இணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜி.எஸ்.சவுத்ரி வெளியிட்டார்.
வரலாற்றில் மிகச்சிறந்த இந்திய தடகள வீரராக பரவலாகக் கருதப்படும் 27 வயதான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் மணிமகுடங்களில் ஒன்றாக இந்த சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ரா முதன்முதலில் ஆகஸ்ட் 26, 2016 அன்று இந்திய ராணுவத்தில் நைப் சுபேதராக சேர்க்கப்பட்டார். பல ஆண்டுகளாக, அவர் பதவி உயர்வு பெற்று, 2021 இல் சுபேதராகவும், 2024 இல் சுபேதர் மேஜராகவும் ஆனார்.
Trending
- உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கட்சி தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்
- இஸ்ரேலில் 692 இலங்கையருக்கு வேலைவாய்ப்பு
- ஆசியாவில் அதிகரிக்கிறது கொவிட்
- ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஆதரவு வழக்கில் இருந்து 12 பேர் விடுதலை
- வேலைநிறுத்தத்தால் இரயில் சேவைகள் பாதிப்பு
- உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பரிசுத் தொகை அறிவிப்பு
- ஐபிஎல் இல் தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி
- நீரஜ் சோப்ராவுக்கு கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி