நெடுந்தீவுக்கு சேவையில் இருந்த குமுதினி படகில் பயணம் சென்றவர்களைப் படுகொலை செய்த 40 வது ஆண்டு நினைவேந்தல் நேன்று வியாழக்கிழமை [15] காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் நடைபெற்றது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியும்,உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
1985ம் ஆண்டு நெடுந்தீவு மாவிலித்துறை முகத்தில் இருந்து புங்குடுதீவு குறிகாட்டுவான் நோக்கி குமுதினி படகில் மக்கள் சென்ற போது கடற்படையினர் இடை மறித்து குழந்தை ,பெண்கள் ,அடங்கலாக உட்பட 36 பேரைநடுக்கடலில் வைத்து வெட்டிப் படுகொலை செய்தனர்.
Trending
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”