தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி மே 17 ஆம் திகதி ஆரம்பமாகும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் முழுமையான ஆலோசனைகளுக்குப் பிறகு, மீதமுள்ள போட்டிகள் மே 17, 2025 முதல் ஆறு குறிப்பிட்ட மைதானங்களில் மட்டும் நடைபெறும் என்றும், ஜூன் 3, 2025 அன்று இறுதிப் போட்டியுடன் முடிவடையும் என்றும் பிசிசிஐ உறுதிப்படுத்தியது.
பெங்களூர், ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை மற்றும் அகமதாபாத்தில் போட்டிகள் நடைபெறும்.
மொத்தம் 17 போட்டிகள் விளையாட திட்டமிடப்பட்டுள்ளன, இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு போட்டிகளும், மற்ற நாட்களில் ஒரு போட்டியும் நடக்கும்.