டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார். ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழு கடந்த மாதம் தொடர்ச்சியான ஆலோசனைகளை நடத்தியது. நேற்று, மும்பையில் இந்த விவகாரம் குறித்தும் விவாதித்திருக்கின்றர்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவரே அறிவித்துள்ளார். அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தங்களின் முடிவை தேர்வுக்குழு பிசிசிஐயிடம் கூறி இருக்கிறது.
அடுத்த மாதம், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4302 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி 40.57 ஓட்டங்கள் ஆகும். 12 செஞ்சரி, 18 அரை செஞ்சரி,88 சிக்ஸஸ், 473 பவுண்டரி. அதிக பட்சமாக 212 ஓட்டங்கள் அடித்துள்ளார்.இந்தியாவிற்கு வெளியே நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 31.01 ஓட்டங்கள் ஆகும். அவுஸ்திரேலியாவில் அவரது சராசரி 24.38 ஆகவும், தென்னாப்பிரிக்காவில் 16.63 ஆகவும் உள்ளது. ஆனால், இங்கிலாந்தில் அவரது சராசரி 44.66 ஓட்டங்கள் ஆகும். முன்னதாக ரி20 யில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.