குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்சியின் அபார சதத்தால் ராஜஸ்தான் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெற்களை இழந்து 209 ஓட்டங்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 80 ஓட்டங்களும் பட்லர் 50 ஓட்டங்களும் எடுத்தனர் .
கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல் அணி தொடக்க ஆட்டக்காரர்கள் வைபவ் சூர்யவன்சி, யஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் ராஜஸ்தான் அணிக்கு அதிரடியான தொடக்கம் தந்தனர். 14 வயது சிறுவனான வைபப் சூரியவன்சி சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசினார். ஒரு பக்கம் இவர் அடித்து ஆட மறுமுனையில் ஜெய்ஸ்வால் நிதானமாக ஓட்டங்களை சேர்த்து வந்தார். சூர்யவன்சி 17 பந்துகளில் தனது அரை சதத்தை கடக்க இந்த சீசனில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் எனோட்டங்ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையும் ஐ பி எல் வரலாற்றில் சூர்யவன்சி படைத்தார். தொடர்ந்து இருவரும் தங்களது அதிரையை தொடர ராஜஸ்தான் ராயல் அணி எட்டாவது ஓவரிலேயே 100 ஓட்டங்களை கடந்தது.
அதிரடியாக விளையாடிய சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் சூரியவன்சி தனதாக்கினார்.
38 பந்துகளில் 103 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேற மறுமுனையில் ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் எடுத்தது.
ல் ராஜஸ்தான் ராயல் 15.3 ஓவர்களில் 210 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.
ஜெய்ஸ்வால் 70 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலும் கப்டன் ரியான் பராக் 32 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தனர்.