தென்னிலங்கை ஊடக அமையம்,யாழ்ப்பாண ஊடக அமையம் ஆகியன இணைந்து ஏற்பாடுசெய்த மாமனிதர் தராகி தர்மரட்ணம் சிவராமின் 20 வது ஆண்டு நினைவேந்த அஞ்சலி சுப்பிரமணிய பூங்காவில் உள்ள ஊடகவியாளர்களின் நினைவு தூபிக்கு முன்பாக இன்று யாயாழ்ப்பாண ஊடக அமையத்தில் போசகர் இ.தயாபரன் தலைமையில் நடைபெற்றது.
கடந்த 20 ஆண்டு காலமாக ஈழத்தமிழர் வாழ்வுரிமை போராட்டத்தில் குரல் கொடுத்துவந்த தராகி சிவராம னுக்கு ஈகைசுடர் யெற்றப்பட்டு,இரண்டு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது. சக ஊடகவியாளர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர்.
யாழ் ஊடக அமையத்தின் தலைவர் து.செல்வகுமார், வடக்கு,கிழக்கு,தென்னி லங்கை ஊடக அமையத்தின் தலைவர் அதிரன்,சமரக்கோன்,சக்திவேல் ஆகியோர்கள், யாழ்ப்பாண ஊடகவியாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
