தந்தை செல்வாவின் நிலைய அறக்கட்ட ளை குழுவின் எற்பாட்டில் தந்தை செல்வா வின் 48 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழு ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக இலங் கை தமிழரசு க்கட்சியின் பொதுச்செயலா ளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந் திரன், சிறப்பு அதிதியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதித்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டு தந்தை செல்வா சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
ஈழத்து தமிழ் பேசும் மக்கள் அரசியலின் தனிகரற்ற தலைவன் தந்தை செல்வா என்னும் தலைப்பில் நினைவுபேருரை யினை மொழித்துறை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் முதுநிலை பேராசிரியர் கலாநிதி றமீம் அப்துல்லா நிகழ்த்தினார்.
