Friday, April 25, 2025 12:30 am
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து புனித திருத்தந்தை பிரான்சிஸ்ஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
, இலங்கைக்கான வத்திக்கானின் அப்போஸ்தலிக் நன்சியோ, பேராயர் பிரையன் என். உதய்க்வே ஜனாதிபதியை வரவேற்றார். பேராயர் உதய்க்வே உடனான ஒரு சுருக்கமான கலந்துரையாடலுக்குப் பிறகு, ஜனாதிபதி திசாநாயக்க இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
புனித திருத்தந்தை பிரான்சிஸ்ஸின் மறைவுக்கு, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக, உலகளாவிய கிறிஸ்தவ சமூகத்திற்கு தனது மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

