இந்தியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க துணை ஜனாதிபதி பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரி நடவடிக்கையின் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த சந்திப்பிற்கு முன்னதாக இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர்.
இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடியும் வான்ஸும் இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து நேர்மறையாக மதிப்பிட்டனர்.
பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
முன்னோக்கிச் செல்லும் பாதையாக உரையாடல் மற்றும் ராஜதந்திரத்திற்கு அழைப்பு விடுத்தனர்.வான்ஸ்ஸின் குடும்பத்துக்கு மோடி இரவு விருந்தளித்தார்.வான்ஸின் மனைவி இந்திய பூர்வீகத்தைக் கொண்டவர்
இந்த ஆண்டு இறுதியில் இந்தியா குவாட் உச்சிமாநாட்டை நடத்த உள்ளது. அதில் ட்ரம்ப் முக்கிய கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.