நிட்டம்புவ-கிரிந்திவெல சாலையில் மணமால சந்திக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை [21] இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
நிட்டம்புவவிலிருந்து கிரிந்திவெலவுக்கு வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து எதிர் திசையில்வந்த லொறியுடன் மோதியது. பஸ் சாரதி உட்பட உட்பட 22 இராணுவ வீரர்கள் காயமடைந்து வத்துபிட்டிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
20 வீரர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர், ஒரு சிப்பாயும் பேருந்தின் சாரதியும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.