உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தயாரித்து வழங்கும் செக்கச்சிவந்த இரத்தம் எனும் சடங்கு நிலை ஆற்றுகை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள திறந்த வெளி அரங்கில் ஆறு வருடங்களின் பின்னர் நேற்று இடம்பெற்றது .
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர்களால் திருப்ப காடுகளின் காட்சி பல்வேறு தலைப்புக்களின் கீழ் ஆற்றுகை செய்பட்டுவந்தது .
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட குண்டுவெடிப்பு ,கொரோனா காரணங்களின் நிமித்தம் ஆற்றுகை இடைநிறுத்த பட்டிருந்தது.
மீண்டும் ஏழு வருடங்கிளின் பின்னர் செக்கச்சிவந்த இரத்தம் எனும் தலைப்பில் நாடகத்துறை ஆசிரியரும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிரதி அதிபரும் நெறியாளருமான ஏ.சி .பிரான்சிஸ்ஸின் நெறியாள்கையில் அரங்கேறியது . வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களால் ஈஸ்டர் பிரார்த்தனை, நடன நிகழ்வுகளும் அரங்கேறியது .
இதேவேளை கடந்த 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை கல்லூரியின் மாணவனாக குறித்த ஆற்றுகையில் கைப்பாஸ், பரபாஸ், பிலாத்து என பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த கலைஞன் தங்காராஜா சுபாஸ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொலிஸ் கடமையில் ஈடுபட்டிருந்த பொழுது காலமானர் இருந்தார். அவருக்கு நிஅனைவஞ்சலி செலுத்தப்பட்டது.