பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களைக் கண்டித்து, நீர்கொழும்பு தெல்வத்த சந்திப்பில் இன்று வெள்ளிக்கிழமை (18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது ஏற்பட்ட துன்பத்தை நினைவுகூரும் புனித வெள்ளியன்று, ‘புனித வெள்ளியை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்’ என்ற கருப்பொருளின் கீழ் இந்தப் போராட்டத்தை ‘கித்துசர’ அமைப்பு ஏற்பாடு செய்தது.
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களும், அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து பதாகைகளை ஏந்திச் சென்றனர்.