புது வருடத்தில் 24 மணி நேரத்தில் பல்வேறு விபத்துக்களில் காயமடைந்து 80க்கும் மேற்பட்டோர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை வட்டாரங்களின்படி, அவர்களில் 30 பேர் வீதி விபத்துகளால் காயமடைந்துள்ளனர். பட்டாசு தொடர்பான விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பொதுமக்கள் அதிக கவனத்துடன் செயல்பட்டால், பண்டிகைக் காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க முடியும் என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.