2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புபடுத்தும் கணிசமான அளவு தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான், 2006 ஆம் ஆண்டு ஒரு இளைஞர் கடத்தப்பட்ட வழக்கில் தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) காவலில் உள்ளார்.