தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் பேரறிஞர் அண்ணா சிலை உள்ள நிலையில், இந்த சிலைக்கு அவ்வப்போது மாலை அணிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் திடீரென அண்ணா சிலை மீது திமுக, பாஜக கொடிகளை இணைத்து சில மர்ம நபர்கள் போட்டுள்ளனர்.
காலையில் இதைப் பார்த்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக நிர்வாகிகளுக்கு தகவல் வழங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, அண்ணா சிலை மீது போடப்பட்டிருந்த திமுக, பாஜக கொடிகளை அகற்றினர். அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருவதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு