நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இலங்கையின் முப்படை வீரர்கள், மருத்துவ ஊழியர்கள் உட்பட ஒரு குழு சனிக்கிழமை சிறப்பு விமானத்தில் மியான்மருக்கு புறப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
“மூன்று புத்த மதப் பிரிவுகளின் தலைமைத் தேரர்களின் வழிகாட்டுதலின் கீழ் சேகரிக்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுடன் முப்படைகளின் மருத்துவ மற்றும் பேரிடர் நிவாரணக் குழுக்கள் சிறிது நேரத்திற்கு முன்பு தீவிலிருந்து மியான்மருக்கு புறப்பட்டன,” என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இலங்கை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரில் மீட்பு, நிவாரணம் மற்றும் மருத்துவ உதவி ஆகியவற்றைக் கொண்ட மூன்று இராணுவக் குழுக்களை ஒரு மில்லியன் அமெரிக்கடொலர் நன்கொடைகளுடன் அனுப்பும்.
மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட சிறப்பு விமானத்தில் முதல் குழு சனிக்கிழமை புறப்பட்டது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.