மோட்டார் போக்குவரத்துத் துஇறையுடன் தொடர்புடைய சட்டவிரோத பதிவு நடைமுறைகள் குறித்து லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தொடர்ந்து நடத்தி வரும் விசாரணையின் ஒரு பகுதியாக 12 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது.
தேவையான சுங்க விடுவிப்பு நடைமுறைகளை மேற்கொள்ளாமல் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டதாக CIABOC தெரிவித்துள்ளது, இது ஊழல் ,அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை மீறுவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறிக்கிறது.
ஒரு ஜீப், ஆறு மிட்சுபிஷி மோன்டெரோ ஜீப்புகள், மூன்று டொயோட்டா ஜீப்புகள், ஒரு டொயோட்டா லேண்ட் குரூசர் பிராடோ மற்றும் ஒரு நிசான் டபுள் கேப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களி அடங்கும்.