Tuesday, October 28, 2025 10:59 am
மத்திய ஆபிரிக்க நாடான கமெரூனில், தற்போதைய ஜனாதிபதியான 92 வயதுடைய போல் பியா 8 வது தடவையாக மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் 12 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் முடிவுகள், அரசியலமைப்புச் சபையினால் நேற்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் போல் பியா என்பவர் மீண்டும் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
92 வயதான தற்போதைய ஜனாதிபதி போல் பியா 53.66 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள அதேநேரம் எதிர்க்கட்சி வேட்பாளரான இஸ்ஸா ச்சிரோமா 35.19 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

