Sunday, March 23, 2025 5:24 pm
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 85 கிலோ கஞ்சா 40 பொதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை [22] அதிகாலை மருதங்கேணிப் பகுதியில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து கஞ்சா கடந்தி வரப்படுவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் படையினர் கடற்கரையில் மேற்கொண்ட சோதனையின்போது கடற்கரையில் கை விடப்பட்ட நிலையில் இருந்து இரு மூடைகள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மூடைகளை பரிசோதித்தபோது அதில் 40 பண்டல்களில் 85 கிலோ கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

