உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மே 22 முதல் ஜூன் 7 வரை மொத்தம் 18,163 மெட்ரிக் தொன் உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட உப்பின் மொத்த மதிப்பு ரூ.1,291 மில்லியன் ஆகும். இதில் ரூ.571 மில்லியன் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு சந்தையை நிலைப்படுத்தவும் போதுமான விநியோகத்தை உறுதி செய்யவும் 30,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.