சவூதி அரேபியா தனது நீண்டகால மதுவிலக்கை, 2026 ஆம் ஆண்டுக்குள் நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது அதன் பழமைவாத கொள்கைகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.
எக்ஸ்போ 2030 , உலகக் கிண்ண உதைபந்தாட்டம் 2034 போன்ற சர்வதேச நிகழ்ச்சிநிரலுக்கு சவூதி தயாராகி வரும் நிலையில் இந்த முடிவு வந்துள்ளது.
புதிய விதிகளின் கீழ், சவுதி அரேபியா முழுவதும் சுமார் 600 நியமிக்கப்பட்ட பகுதிகளில் மதுபானம் விற்கப்படும், முக்கியமாக சொகுசு ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் ,சுற்றுலாப் பயணிகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதிகளில் மது விற்பனை செய்யப்படும். மது விற்பனைக்கு அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் நியோம், சிண்டாலா தீவு மற்றும் செங்கடல் ப்ராஜெக்ட் ஆகியவை அடங்கும்.இந்த இடங்களில் பியர் , ஒயின் , சைடர் பரிமாற அனுமதிக்கப்படும்.இருப்பினும், புதிய கொள்கையின் கீழ் மதுபானங்கள் போன்ற வலுவான பானங்கள் தொடர்ந்து தடைசெய்யப்பட்டிருக்கும்.
வீடுகள், கடைகள் அல்லது பொது இடங்களில் மது அருந்த அனுமதிக்கப்பமாட்டாது என்றும், தனிப்பட்ட முறையில் மது உற்பத்தி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.