தனியார் மருந்துக் கடைகளில் கிடைக்கும் பல்வேறு பிராண்டுகளின் கிட்டத்தட்ட 7,500 மருந்துகளில், சுமார் 700 மருந்துகள் மட்டுமே விலை ஒழுங்குமுறையின் கீழ் வருகின்றன, இதனால் நோயாளிகள் அதிக விலைக்கு மீதமுள்ளவற்றை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை, மேலும் அவர்கள் கடுமையான நிதி அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணர்கள் சங்கம் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவா, தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சமீபத்திய வர்த்தமானியில் சுமார் 60 வகை மருந்துகளுக்கான விலை வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன, இதில் பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த சுமார் 700 மருந்துகள் அடங்கும். 7,000 க்கும் மேற்பட்ட மருந்துகள் இந்த ஒழுங்குமுறைக்கு வெளியே இருந்தன என்றும், அவை அதிக விலைக்கு விற்கப்பட்டன என்றும் அவர் மேலும் கூறினார்.
“இந்த மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்தாதது நீண்ட கால மருந்துகளை நம்பியிருக்கும் நோயாளிகளின் மாதாந்திர செலவுகளை கடுமையாக அதிகரித்துள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், சுகாதார அமைச்சு, மருந்து நிறுவனங்கள் உட்பட தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடி இந்த மருந்துகள் மலிவு விலையில் விற்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.