இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 1,000 க்கும் மேற்பட்ட குழந்தை துஷ்பிரயோக புகார்கள் பதிவாகியுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தண்டனைச் சட்டம் (திருத்தம்) மசோதாவின் இரண்டாவது வாசிப்பு விவாதத்தின் போது இன்று புதன்கிழமை (24) அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 1,126 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது 2024 ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 1,350 வழக்குகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும்.
குழந்தைகள் தங்கள் வீடுகள், பள்ளிகள், தடுப்பு நிலையங்கள் , பொது இடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள் என்று அமைச்சர் பால்ராஜ் குறிப்பிட்டார்.